Friday, 3 August 2018

Quentin Tarantino - A bad screenwriter

Quentin Tarantino ஒரு நல்ல இயக்குனர். ஆனால் ஒரு மோசமான screenwriter. இவரை கிட்டத்தட்ட ஒரு cheater என்றே சொல்லாம்.

திரைக்கதையில் நம்மால் எதை பார்க்க முடிகிறதோ அதை மட்டும் தான் எழுத வேண்டும். திரையில் நாம் கடைசி வரை பார்க்காததை எழுதவே கூடாது.  உதாரணமாக Character introவில், நல்ல உயரம், brown hair,  clean shaven , wearing black jacket என்று விவரிக்கலாம். ஆனால் இவரோ, அவன் 300 கொலைகள் செய்தவன், இவன் பார்த்தாலே பெண்கள் மயங்கி விடுவார்கள், இவனுக்கு வேகமாக கார் ஓட்ட தெரியும் என்றெல்லாம் எழுதவே கூடாது. அப்படி எழுதினால் அது திரையில் வர வேண்டும். Quentin இந்த தவறைத்தான் செய்து கொண்டிருக்கிறார்.

இவரின் scriptல் இருக்கும் நிறைய விஷயங்கள் சினிமாவில் கடைசி வரை வரவே வராது. அப்புறம் ஏன் இப்படி செய்கிறார் என்றால் இவரின் கதையை இவரேதான் இயக்குவார்.

இவரின் True Romance  திரைக்கதையை தவிர மற்ற அனைத்திலும் இந்த பிழைகளை பார்க்க முடியும். மேலும் இவரின் திரைக்கதைகள் வெறும் வசனங்களாக நிரம்பி வழியும். Visuals என்பதே இருக்காது.

ஆகவே திரைக்கதை எழுத முயற்சி செய்பவர்கள் இவரை பின்பற்றினால் ஒரு நல்ல screenwriter ஆக வர முடியாது. மாறாக, The Danish Girl, Looper, Judgement Day, Bridges of Spies, Spring-summer-winter, Derzu Uzala போன்ற திரைக்கதைகளை படித்து பாருங்கள். அதுவே சிறந்த திரைக்கதைகள்.

No comments:

Post a Comment