வாடிவாசல்
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட நாவல்தான் வாடிவாசல். எழுதியவர் சி.சு. செல்லப்பா.
களத்தில் காளை சீறிக்கொண்டு வருகிறது. அதை எப்படி நாயகன் அடக்குகிறான் என்கிற அந்த ஒரே ஒரு சம்பவத்தை மட்டுமே வைத்து நாவலை உருவாக்கி இருப்பது அருமை. இது மற்ற தமிழ் நாவல்களில் இருந்து தனித்துக் காட்டுகிறது. நாவலை வாசிப்பது என்பது ஒரு Live telecast ஜல்லிக்கட்டைப் பார்ப்பது போல் உள்ளது. வாடிவாசல் தமிழின் மிக முக்கியமான நாவலாக கருதப்படுகிறது.
ஆனால்,
கிழவனும் கடலும் போன்று சர்வதேச தரத்தில் வந்திருக்க வேண்டிய ஒரு நாவல் இறுதியில் ஜல்லிக்கட்டுக்கு தலைமை தாங்கும் பண்ணையாருக்கு சொம்பு அடிப்பது மூலமாகவும், உயர் ஜாதி கொள்கைகளை தூக்கி பிடிப்பது மூலமாகவும் ஒரு சராசரி நாவலாக தமிழ்நாட்டிலேயே தேங்கி நின்று விட்டது.
பண்ணையாருக்கு வணக்கம் வைக்கும் அரசியலைத் தான் நாவலாசிரியர் சொல்ல வருகிறார் என்றால் ஜல்லிக்கட்டு எப்படி வீர விளையாட்டாக இருக்க முடியும்? மரியாதை என்பது வேறு. அடிமைத்தனம் என்பது வேறு. ஒரு காளையை அடக்கி விட்டு பண்ணையாருக்கு வணக்கம் வைப்பது என்பது அந்த வீரனின் கோழைத்தனத்தைதான் காட்டுகிறது.
அந்தக் காலத்திலும் காளையை அடக்கி விட்டு பண்ணையாருக்கு வணக்கம் வைக்கும் முறை இருந்திருக்கிறதா என்று தெரியவில்லை. ஒருவேளை அப்படி இருந்திருந்தால் ஜல்லிக்கட்டு கோழைகளின் விளையாட்டாகத்தான் கருத முடியும். ஒரு அட்டகாசமான த்ரில்லர் நாவல் போல் இருந்தாலும் இந்த அரசியலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
தெரிந்தோ தெரியாமலோ எழுத்தாளர் இந்த அரசியலைத் தான் முன் வைத்திருக்கிறார். அது தான் இந்த நாவலை தமிழக எல்லையை தாண்ட முடியாமல் செய்து விட்டது.

No comments:
Post a Comment