Friday, 3 August 2018

உன்னதம்

THE MAN IS BACK!

Yes, Gowthama Siddarthan is back with உன்னதம்.

Google இல்லாத காலகட்டத்திலேயே சர்வதேச இலக்கிய நிகழ்வுகளை வழங்கிக்கொண்டிருந்த உன்னதம் இதழ் பல வருடங்கள் பல பிரச்சினைகளால் வராமல் இருந்தது. இப்போது மீண்டும் வர ஆரம்பித்திருக்கிறது.

உயிர்மை, காலச்சுவடு, தீராநதி, தற்போது தடம் என்று நிறைய இருந்தாலும் உன்னதத்தின் special, இது முழுக்க முழுக்க சர்வதேச இலக்கியத்தை குறி வைத்து இயங்கும் இதழ் என்பதுதான். ஒவ்வொரு மாதமும் ஒரு படைப்பாளியை தேர்வு செய்து, அவரைப் பற்றியும், அவரின் படைப்புகள் பற்றியும் விவரிக்கிறது உன்னதம்.

சென்ற இதழ்,  இத்தாலோ கால்வினோ.  இவரின் Invisible Cities (புலப்படாத நகரங்கள்) மிக மிக அற்புதமான ஒரு நாவல். இவர் தேடி அலைந்து உருவாக்கிய இத்தாலிய நாட்டுப்புற கதைகள் உலக அளவில் மிக முக்கியமானதாகப் பார்க்கப் படுகிறது. மேலும் இவரைப் பற்றிய விமர்சனங்கள், பேட்டி என்று விரிகிறது உன்னதம்.

இந்த மாத உன்னதத்தில் மிலோராட் பாவிச் (Milorad Pavic). இவரின் நாவல்களான Dictionary of the Khazars மற்றும் Last love in Constantinople உலகப் புகழ் பெற்றது.

நிச்சயமாக இந்த மாதமும் உன்னதம் மிக சுவாரசியமாக இருக்கும் என்று நினைக்கிறேன், because of Milorad Pavic. சென்னை ராயப்பேட்டையில் நடக்க இருக்கும் இந்த புத்தக கண்காட்சியில் மிலோராட் பாவிச்சுக்காக இந்த மாத உன்னதம் இதழை அவசியம் வாங்க வேண்டும்.. 

வாங்கி வாசித்துப் பாருங்கள்.

No comments:

Post a Comment