தீரன் - Highly disappointing film.
சதுரங்க வேட்டை வெற்றி அடைந்ததற்கு காரணம் திரைக்கதை, வசனம் மற்றும் ஸ்டைலிஷான காட்சிகள். தீரன் படத்தில் அந்த மாதிரி எந்த காட்சியும் இல்லை.
ராஜஸ்தான் லாரி டிரைவர்கள் தமிழ்நாட்டில் கொள்ளை அடித்து விட்டு ராஜஸ்தானுக்கு சென்று பதுங்கிவிடுகிறார்கள். அவர்களை ராஜஸ்தான் சென்று பழி வாங்குவதுதான் கதை.
Well, படத்தின் ஆரம்பத்தில் வீடு புகுந்து மக்களை கொடூரமாக கொன்று கொள்ள அடிக்கும் அந்த இரண்டு காட்சிகள் மட்டும் super. ஆனால் அதன் பிறகு கதை நகரவே இல்லை. கார்த்தி லவ் பன்னுகிறார் லவ் பன்னுகிறார் லவ் பன்னிக்கொண்டே இருக்கிறார். படம் ஆரம்பித்து ஒரு மணி நேரத்துக்கு லவ்வுதான். இடைவேளை வரும்போதுதான் கதை ஆரம்பிக்கிறது. அதையும் சரியாக எடுக்க வில்லை.
இடைவேளைக்கு பிறகு ராஜஸ்தான் சென்று கொள்ளையர்களை வேட்டை ஆடுவதுதான் மீதி கதை.அதையும் சரியாக எடுக்கவில்லை.
படத்தின் மிகப் பெரிய பலவீனம் action scenes. ஒரு சண்டைகாட்சிக்கூட ஸ்டைலிஷாக இல்லை. கார்த்தி வில்லனை ஓடியே பிடித்துவிடுகிறார். இல்லை என்றல் டாடா சுமோவில் அங்கேயும் இங்கேயும் அலைகிறார்கள். அதுவும் இல்லை என்றால் ராஜஸ்தான் பாலைவனத்தில் 10 கிலோமீட்டர் நடந்தே வில்லனை பிடிக்கிறார்கள்.வில்லன் கார்த்தியை போட்டுத்தள்ளுவதற்கு நிறைய இடங்களில் வாய்ப்பு இருந்தும் அதை செய்யாமல் வில்லன் பான் பராக் போட்டுக்கொண்டு வசனம் பேசிக்கொண்டிருக்கிறார். படத்தை மூன்று மணி நேரம் ஓட்ட வேண்டுமே. இப்படி ஒரு கேனத்தனமான வில்லனை எந்த படத்திலும் பார்த்ததில்லை.
பின்னணி இசை நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் படத்தில் ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இசையமைப்பாளருக்கு கை வலிக்காதா?
கிளைமாக்ஸ் காட்சியை REVENANT படத்தில் இருந்து அப்படியே சுட்டிருக்கிறார்கள். டைரக்டர் வினோத், நீங்களுமா?
படத்தில் நல்ல விஷயங்களே இல்லையா ?
படத்திற்கு அற்புதமான ஒளிப்பதிவு. Close-up மற்றும் Long Shots அற்புதமாக இருக்கிறது. வில்லனுக்கான Flashback அருமை. ராஜபுத்திர வீரர்கள் காட்டுக்குள் மறைந்து வேட்டைக்காரர்களாக மாறி பின்னர் கொள்ளைக்காரர்களாக மாறும் விதம் அருமை. படத்தில் இந்த Sub-story மற்றும் Sub-textயை நன்றாக எடுத்திருக்கிறார்கள். ஹீரோயின் அழகாக இருக்கிறார். இதைத்தவிர தீரனில் வேறு எதுவும் இல்லை.
வினோத் ஒரு அற்புதமான இயக்குனர். சதுரங்க வேட்டையை அற்புதமாக எடுத்துவிட்டு தீரனை சரியாக எடுக்கவில்லை. அவசரம் அவசரமாக எடுத்ததால் இப்படி ஆகிவிட்டது என்று நினைக்கிறன்.
மற்றபடி ஹீரோயினுக்காக தீரன் படத்தை ஒருமுறை பார்க்கலாம்.

No comments:
Post a Comment