ஒற்றன் - அசோகமித்திரன்.
சிகாகோ நகரில் நடக்கும் ஒரு இலக்கிய சந்திப்புக்காக தமிழகத்தில் இருந்து செல்லும் ஒரு எழுத்தாளரின் அனுபவங்களே ஒற்றன்.
அசோகமித்திரன் vegetarian என்பதால் ரசப்பொடியை எடுத்துக்கொண்டு சிகாகோ செல்கிறார். அறையில் தங்குகிறார். எழுத்தாளர்களை சந்திக்கிறார். உரையாடுகிறார். சிகாகோவை சுற்றுகிறார். சென்னை திரும்புகிறார். அவ்வுளவுதான் நாவல். நல்ல concept. நல்ல characters.
ஆனால்...
உலகின் மிக முக்கியமான நாவல்களில் ஒன்றாக வந்திருக்க வேண்டிய ஒற்றன் வழக்கமான தமிழ் நாவல்களை போல சுருங்கி போய்விட்டது. பல்வேறு நாடுகளில் இருந்து வரும் எழுத்தாளர்களை சந்திக்கும் போது எப்படி எல்லாம் கதைக்களத்தை பிரம்மாண்டமாக கொண்டு போயிருக்க முடியும். அவர்களுடைய எழுத்து, வாசகர்கள், விற்பனை, வருமானம், அரசியல், etc, என்று எப்படியல்லாம் கொண்டு போயிருக்க முடியும். ஆனால் அசோகமித்திரன் இந்நாவலில் சொல்லியிருப்பது: அறையில் தங்குவது, டீ சாப்பிடுவது, ஷூ வாங்குவது, மளிகை சாமான்கள் வாங்குவது என்று ஒரு கல்லூரி பேராசிரியர் தன் பயண அனுபவங்களை சொல்வதுபோல் சொல்லியிருக்கிறார். அசோகமித்திரனிடம் ஒரு கேள்வி: நீங்கள் சிகாகோ சென்றது இலக்கிய சந்திப்புக்கா? அல்லது திருமண நிகழ்ச்சிக்கா?
மற்றபடி பனி படர்ந்த சிகாகோ சாலையில் அசோகமித்திரன் கடை கடையாக அலையும் காட்சிகளும் பேருந்துக்காக காத்திருக்கும் இடங்களும் நல்ல கற்பனை வளத்தோடு சொல்லப்பட்டிருக்கிறது.
இந்த நாவலை அசோகமித்திரன் ஒரு பத்திரிகையில் எழுதிய பயண கட்டுரைகளை ஒன்றாக்கி நாவலாக தந்துள்ளனர். அதானாலோ என்னவோ ஒரு நாவல் வாசித்த அனுபவத்தை ஒற்றன் தரவில்லை. உண்மையிலேயே நீங்கள் ஒரு நல்ல பயண புத்தகத்தை வாசிக்க விரும்பினால் பல்லவி அய்யர் எழுதிய "சீனா: விலகும் திரை" என்ற புத்தகத்தை வாசித்து பாருங்கள்.
மேலும் இளம் எழுத்தாளர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். நீங்கள் முகநூலில் எழுதும் கட்டுரைகளை எல்லாம் ஒன்றாக்கி ஒற்றன் போல் ஒரு நாவலாக தர முயற்சிக்க வேண்டாம். Please.

No comments:
Post a Comment