Friday, 3 August 2018

முருகன் விநாயகன்

முருகன் வினாயகனைப் பற்றி மிக மோசமான அரசியல் நடைப்பெற்று வருகிறது. இந்த இரண்டு கடவுளையும் பற்றி நமக்கு என்ன தெரியும்? இதை முழுமையாக புரிந்துக்கொள்ள வேண்டுமா? அப்படி என்றால் நீங்கள் வாசிக்க வேண்டிய ஒரு அற்புதமான புத்தகம் கௌதம சித்தார்த்தனின் "முருகன் விநாயகன்".

தமிழர்கள் ஒருநாள் இந்த பிரச்சினையை சந்திப்பார்கள் என்பதை முன்கூட்டியே சொல்லி யிருப்பது அபாரமானது. இரண்டு கடவுள்களையும் மிக ஆழமாக அலசப்பட்டிருக்கிறது.

வெறும் 46 பக்கங்கள்தான். இதை படித்து முடித்து விட்டால் நீங்கள் எந்த அரசியல் விவாத்தில் கூட கலந்துக்கொண்டு பட்டையைக் கிளப்ப முடியும்.

வெறும் 46 பக்கங்களில் எப்படி இவ்வளவு ஆழமாக அலச முடியும் என்பதை நினைத்துப் பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது.

இந்த புத்தகத்தை சிறப்பான முறையில் பதிப்பித்த எதிர் வெளியீடு Anushக்கு வாழ்த்துகள்.

No comments:

Post a Comment