Friday, 3 August 2018

சு.ரா., காலச்சுவடு, ஒரு புளியமரத்தின் கதை

தமிழின் மிக முக்கியமான நாவல் "ஒரு புளியமரத்தின் கதை". ஊருக்கே நிழலைத் தந்துக் கொண்டிருக்கும் ஒரு புளியமரம், அதை சுற்றியுள்ள மனிதர்களின் பேராசையாலும், சுயநலத்தாலும் ஒரு மரம் எப்படி வெட்டி வீழ்த்தப்படுகிறது என்பதுதான் நாவல்.

நல்ல concept. ஆனால் அழுத்தம் இல்லாத சம்பவங்களாலும், சுவாரசியம் இல்லாத கிளைக் கதைகளாலும் அந்த மரம் வெட்டப்படும் போது ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த தவறிவிடுகிறது.

எனினும் ஒரே மாதிரியான நாவல்கள் வந்துகொண்டிருந்த போது தன்னுடைய Out of Box thinking மூலம்  தமிழ் இலக்கியத்தில் ஒரு பெரிய அலைய ஏற்படுத்தியவர். ஏகப்பட்ட மனிதர்களை தமிழ் இலக்கியத்தை நோக்கி திருப்பியவர். எழுத்தாளர்கள்  சினிமாக்கார்களிடம் விலைக்கு போய்க்கொண்டிருந்த சூழலில் எக்காரணத்தைக் கொண்டும் தன் இலக்கிய ஆளுமையை விட்டுக் கொடுக்காத கலை ஆளுமை. மேலும் அவருடைய காலச்சுவடு பதிப்பகம் தரமான நாவல்கள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள் என்று தமிழ் வாசகர்களுக்கு வழங்கி வருகிறது.

வாடிவாசல்

வாடிவாசல்

தமிழர்களின் வீர விளையாட்டான  ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட நாவல்தான் வாடிவாசல். எழுதியவர் சி.சு. செல்லப்பா.

களத்தில் காளை சீறிக்கொண்டு வருகிறது. அதை எப்படி நாயகன் அடக்குகிறான் என்கிற அந்த ஒரே ஒரு சம்பவத்தை மட்டுமே வைத்து நாவலை உருவாக்கி இருப்பது அருமை. இது மற்ற தமிழ் நாவல்களில் இருந்து தனித்துக் காட்டுகிறது. நாவலை வாசிப்பது என்பது ஒரு Live telecast ஜல்லிக்கட்டைப் பார்ப்பது போல் உள்ளது. வாடிவாசல் தமிழின் மிக முக்கியமான நாவலாக கருதப்படுகிறது.

ஆனால்,

கிழவனும் கடலும் போன்று சர்வதேச தரத்தில் வந்திருக்க வேண்டிய ஒரு நாவல் இறுதியில் ஜல்லிக்கட்டுக்கு தலைமை தாங்கும் பண்ணையாருக்கு சொம்பு அடிப்பது மூலமாகவும், உயர் ஜாதி கொள்கைகளை தூக்கி பிடிப்பது மூலமாகவும் ஒரு சராசரி நாவலாக தமிழ்நாட்டிலேயே தேங்கி நின்று விட்டது.

பண்ணையாருக்கு வணக்கம் வைக்கும் அரசியலைத் தான் நாவலாசிரியர் சொல்ல வருகிறார் என்றால் ஜல்லிக்கட்டு எப்படி வீர விளையாட்டாக இருக்க முடியும்? மரியாதை என்பது வேறு. அடிமைத்தனம் என்பது வேறு. ஒரு காளையை அடக்கி விட்டு பண்ணையாருக்கு வணக்கம் வைப்பது என்பது அந்த வீரனின் கோழைத்தனத்தைதான் காட்டுகிறது.

அந்தக் காலத்திலும் காளையை அடக்கி விட்டு பண்ணையாருக்கு வணக்கம் வைக்கும் முறை இருந்திருக்கிறதா என்று தெரியவில்லை. ஒருவேளை அப்படி இருந்திருந்தால் ஜல்லிக்கட்டு கோழைகளின் விளையாட்டாகத்தான் கருத முடியும். ஒரு அட்டகாசமான  த்ரில்லர் நாவல் போல் இருந்தாலும் இந்த அரசியலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தெரிந்தோ தெரியாமலோ எழுத்தாளர் இந்த அரசியலைத் தான் முன் வைத்திருக்கிறார். அது தான் இந்த நாவலை தமிழக எல்லையை தாண்ட முடியாமல் செய்து விட்டது.

சர்வைவா - அதிஷா

இந்தியாவின் சிறந்த பத்திரிகைகளில் ஒன்று ஆனந்த விகடன்.  மேலும் Science fictionக்கு அதிக முக்கியத்துவம் தரும் பத்திரிகையும் விகடனே!

கடந்த எட்டு வாரங்களாக "சர்வைவா" என்ற science fiction தொடரை அட்டகாசமாக எழுதி வருகிறார் அதிஷா. வெறும் குறிப்புகளாக இல்லாமல் சுவாரசியமாக இருக்கிறது தொடர். இந்த வாரத்தில் சினிமாவில் திரைக்கதை, இசை, எடிட்டிங் போன்ற அனைத்தையும் (இயக்குனரை தவிர) ஒரு ரோபோவை வைத்தே ஒரு திரைப்படத்தை எடுத்துவிட முடியும் என்று சொல்லி இருப்பது புதுமையாக இருக்கிறது. அப்படி பார்த்தால் எதிர்காலத்தில் ஒரு திரைப்படத்தில் இயக்குனரை தவிர வேறு யாருமே இருக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

Science fictionல் ஆர்வம் இருப்பவர்கள் தவர விடக்கூடாத தொடர் இது.  இந்த தொடரை அற்புதமாக எழுதி வரும் அதிஷா அவர்களுக்கு என் வாழ்த்துகள்!

Dune

Dune.

Science fiction நாவல்களின் உச்சம் என்று கொண்டாடப்படும் நாவல்தான் Dune. எழுதியவர் Frank Herbert.

Atreides மற்றும் Harkonnen என்று இரண்டு குழுக்கள். Atreides ராஜாவான Duke Leto வை Harkonnen இனத்தினர் கொல்கிறார்கள். Letoவின் துணைவி Jessica மற்றும் அவர்களின் மகன் Paul அங்கிருந்து தப்பித்து பாலைவனத்துக்கு வருகிறார்கள். அங்கு வசிக்கும் Fremen என்ற பழங்குடியினர் அவர்களுக்கு உதவ முன் வருகிறார்கள். பின்னர் Atreides மற்றும் Harkonnenக்கு நடக்கும் யுத்தத்தில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதே 670 பக்க நாவல்.

Science fiction உலகத்தை நன்றாக கட்டமைத்திருக்கிறார் Frank Herbert. இந்த உலகத்தில் தண்ணீரே கிடையாது. ஆகவே இறந்து போன உடலில் இருந்து 78 சதவீத தண்ணீரை தொழில்நுட்பம் மூலம் வெளியேற்றி ஒரு மிகப்பெரிய ராட்சச கிடங்கில் சேகரிக்கிறார்கள். மனிதர்கள் இறக்க இறக்க கிடங்கு தண்ணீரால் நிரம்பி கொண்டே இருக்கும்.

இந்த பாலைவனத்தில் ராட்சச மண்புழுக்கள் வசிக்கிறது. ஒவ்வொரு புழுவும் டைனோசர் போல் இருக்கிறது. ஒரே நேரத்தில் ஆயிரம் மனிதர்களை விழுங்கக் கூடியது. Fremen பழங்குடியினர் சில உத்திகளை கையாண்டு அந்த புழுக்கள் மீது அமர்ந்து பாலைவனத்தை கடக்கும் இடமும், ராட்சச மணல் புயல் பாலைவனத்தை தாக்கும் இடமும் நல்ல fantasy பக்கங்கள்.

ஒற்றர்கள் மூலம் Duke கடத்தப்படுவதும், Jessica அதிகாலையில் எழுந்த பிறகு தான் கடத்தப்பட்டிருப்பது தெரியும் இடமும் செம. பின்னர் Duke விஷ வாயுவை வைத்து எதிரிகளை கொல்லும் இடமும் நல்ல Science fiction.

Jessica பழங்குடி மக்களின் தலைவியாக பதவி ஏற்கும் இடமும் Paul தலைவனாக அறிவிக்கப்பட்ட உடன்  ராட்சச தண்ணீர் கிடங்கை போய் பார்க்கும் இடமும் நச். Class. பிரமாண்டம்.

ஆனால் இதை No.1 Science fiction நாவல் என்று சொல்ல முடியாது. ஒரு பக்கத்தில் முடிய வேண்டிய உரையாடல்களை நாலு பக்கங்களுக்கு நீண்டு இருப்பது சலிப்பை ஏற்படுத்துகிறது. ராஜா ராணி, கத்தி சண்டை, வைப்பாட்டிகள் என்று பின் நவீனத்துவமும் fantasyயும்தான் அதிகம் தென்படுகிறது.  Jessicaவும் Paulம் தப்பிக்கும் இடமும் சுமார்தான். ராட்சச மண் புழுக்களையும், மணல் புயலையும் வைத்து ஒரு மிகப்பெரிய பேரழிவும் action காட்சிகளும் வரும் என்று பார்த்தால் ஏமாற்றமே.

ஆனால்...

670 பக்க நாவலை எந்த லாஜிக் ஓட்டைகளும் இல்லாமல் எந்த  குழப்பமும் இல்லாமல், சுவாரசியமாக சொல்லி இருப்பது ஒரு மிகப்பெரிய சாதனை. நாவலில் அட்டகாசமான காட்சிகள் நிறைய இருக்கிறது. முக்கியமாக இதன் structure. நாவலை வாசித்து முடிக்கையில் ஒரு நல்ல இதிகாசத்தை வாசித்த அனுபவத்தை ஏற்படுத்திவிடுகிறது Dune. அதுதான் இந்த நாவலின் வெற்றி.

இந்த நாவல் மிகப்பெரிய வெற்றி அடைந்ததால் இதற்குப் பிறகு இன்னும் நான்கு பாகங்களை எழுதியிருக்கிறார் Frank Herbert.

Science fiction genreல் இது மிக மிக முக்கியமான ஒரு நாவல்.

ஒற்றன்

ஒற்றன் - அசோகமித்திரன். 

சிகாகோ நகரில் நடக்கும் ஒரு இலக்கிய சந்திப்புக்காக தமிழகத்தில் இருந்து செல்லும் ஒரு எழுத்தாளரின் அனுபவங்களே ஒற்றன்.

அசோகமித்திரன் vegetarian என்பதால் ரசப்பொடியை எடுத்துக்கொண்டு சிகாகோ செல்கிறார். ‌அறையில் தங்குகிறார். எழுத்தாளர்களை சந்திக்கிறார். உரையாடுகிறார். சிகாகோவை சுற்றுகிறார். சென்னை திரும்புகிறார். அவ்வுளவுதான் நாவல். நல்ல concept. நல்ல characters.

ஆனால்...

உலகின் மிக முக்கியமான நாவல்களில் ஒன்றாக வந்திருக்க வேண்டிய ஒற்ற‌ன் வழக்கமான தமிழ் நாவல்களை போல சுருங்கி போய்விட்டது.  பல்வேறு நாடுகளில் இருந்து வரும் எழுத்தாளர்களை சந்திக்கும் போது எப்படி எல்லாம் கதைக்களத்தை பிரம்மாண்டமாக கொண்டு போயிருக்க முடியும். அவர்களுடைய எழுத்து, வாசகர்கள், விற்பனை, வருமானம், அரசியல், etc, என்று எப்படியல்லாம் கொண்டு போயிருக்க முடியும். ஆனால் அசோகமித்திரன் இந்நாவலில் சொல்லியிருப்பது: அறையில் தங்குவது, டீ சாப்பிடுவது, ஷூ வாங்குவது, மளிகை சாமான்கள் வாங்குவது என்று ஒரு கல்லூரி பேராசிரியர் தன் பயண அனுபவங்களை சொல்வதுபோல் சொல்லியிருக்கிறார். அசோகமித்திரனிடம் ஒரு கேள்வி: நீங்கள் சிகாகோ சென்றது இலக்கிய சந்திப்புக்கா? அல்லது திருமண நிகழ்ச்சிக்கா?

மற்றபடி  பனி படர்ந்த சிகாகோ சாலையில்  அசோகமித்திரன் கடை  கடையாக அலையும் காட்சிகளும் பேருந்துக்காக காத்திருக்கும் இடங்களும் நல்ல கற்பனை வளத்தோடு சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த நாவலை அசோகமித்திரன் ஒரு பத்திரிகையில் எழுதிய பயண கட்டுரைகளை ஒன்றாக்கி  நாவலாக தந்துள்ளனர். அதானாலோ என்னவோ ஒரு நாவல் வாசித்த அனுபவத்தை ஒற்றன் தரவில்லை. உண்மையிலேயே நீங்கள் ஒரு நல்ல பயண புத்தகத்தை வாசிக்க விரும்பினால் பல்லவி அய்யர் எழுதிய "சீனா: விலகும் திரை" என்ற புத்தகத்தை வாசித்து பாருங்கள்.

மேலும் இளம் எழுத்தாளர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். நீங்கள் முகநூலில் எழுதும் கட்டுரைகளை எல்லாம் ஒன்றாக்கி ஒற்றன் போல் ஒரு நாவலாக தர முயற்சிக்க வேண்டாம். Please.

Living with the Himalayan Masters

கடவுளை நேரில் காண முடியுமா?

முடியும் என்கிறது Living With The Himalayan Masters.

1976 முதல் 20 வருடங்கள் ராஜ்மானி திகுநாய்த் என்பவர் ராமாவுக்கு சீடராக இருந்து விடை பெறும் போது ராமா தன் அனுபவங்களை சொல்ல ஆரம்பிக்கிறார்... உருவாகிறது Living With The Himalayan Masters.

இது வழக்கமான ஆன்மீக புத்தகம் அல்ல. கடவுள்‌‌, வாழ்க்கை, உலகம், அரசியல், மதம், போலி சாமியார்கள் என்று பல கேள்விகளுக்கு அழகான கதைகள் மூலம் சுவாரசியமாக விடை அளிக்கிறது இந்நூல்.

இமயத்தில் ஒரு துறவி யாசகம் கேட்டு ஒரு வீட்டின் முன் நிற்கிறார். சாப்பிட்டு முடித்ததும் அந்த கணவன் மனைவியிடம் "உங்களுக்கு குழந்தை பிறந்து ஐந்து வயது ஆனபிறகு இமைய மலையில் நான் இருக்கும் இடத்திற்கு அனுப்பி விடுங்கள்" என்று சொல்லி விட்டு சென்று விடுகிறார். அதே போல் அந்த குழந்தை ஐந்து வயது ஆனபிறகு இமைய மலைக்கு செல்கிறது. அந்த குழந்தைதான் ராமா. அதன் பிறகு ராமாவுக்கும் அவருடைய குருவுக்கும் நடக்கும் விவாதம், சண்டை, கல்வி, அவர்களை பார்க்க வரும் மனிதர்கள், உணர்தல், செயல் படுத்தல் என்று விரிகிறது L.W.T.H.M.

துறவி என்பவர் மந்திரவாதி கிடையாது என்றும், தண்ணீரில் நடப்பது, ஒரேநாளில் நோயை குணப்படுத்துவது போன்ற ஜிம்மிக்ஸ் வித்தையெல்லாம் அவர்களால் செய்ய முடியாது என்றும் அவர்களும் நம்மை போன்ற சாதாரண மனிதர்களே என்பதை உணர்த்துகிறது.

கடவுளை நேரில் காண்பது என்பது தியான நிலையில் இருக்கும் போது உங்களை நீங்கள் முழுமையாக உணரும் போது இறைவனை பார்க்க முடியும் என்று சொல்கிறது இந்நூல். Well written.

தீண்டாமை என்பது இந்து மதத்தில் கிடையாது என்றும் அதை உருவாக்கியவர்கள் ஹிந்துக்களே அல்ல என்று சொல்கிறார் "ராமா".

மிக முக்கியமாக, போலி சாமியார்களையும், மதத்தையும் வைத்து பிழைப்பு நடத்தும் வட இந்திய அரசியல்வாதிகளையும் சும்மா கிழி கிழி என்று கிழிக்கிறார் "ராமா".

இமைய மலை பற்றியும், அங்குள்ள துறவிகளின் வாழ்க்கை, அனுபவம் மற்றும் சுவாரசியமான கதைகள் மூலம் ஒரு  நல்ல வாசிப்பு அனுபவத்தை தருகிறது இந்நூல்.

Finally, a well written book.

இந்நூல் தமிழ், ஆங்கிலம், இரண்டிலும் கிடைக்கிறது.

நீருக்கடியில் ‌சில குரல்கள்

தமிழில் வன்முறை, நிழல் உலகம் போன்றவற்றை மையமாக வைத்து எழுதப்படும் நாவல்கள் குறைவு. இல்லை என்றே சொல்லலாம். இப்படி இருக்கையில் கச்சிதமாக, சுவாரசியமாக வந்திருக்கும் ஒரு நாவலே "நீருக்கடியில் ‌சில குரல்கள்". எழுதியவர் Prabhu Kalidas.

தாயைப் பிடிக்காத ஒருவனும் தந்தையைப் பிடிக்காத இன்னொருவனும் வீட்டை விட்டு வெளியேறி இறுதியில் வன்முறையோடு தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்வதுதான் கதை.

பிரபு காளிதாஸ் ஒரு சிறந்த புகைப்படக் கலைஞர் என்பதாலோ என்னவோ நாவல் முழுக்க நிறைய visuals.

நாவலின் சிறந்த இடங்கள்:

1. கதிரவன் கணேசனிடம் அடியாளாக சேரும் இடம்.
2. அடியாளாக சேர்ந்த பிறகு கதிரவன் மதுக்கடையில் உளவு பார்க்கும் இடம்.
3. பழியை ஏற்றுக் கொண்டு சிறை செல்லும் இடம்.
4.கதிரவன்-தர்மலிங்கம்-தியேட்டர் காட்சிகள்.
5. ஒரு கதாபாத்திரம் தற்கொலை செய்து கொள்ளும் காட்சி.
6.சுந்தரை சிறையில் இருந்து ரவி அழைத்து வரும் இடங்கள்.
7. கதிரவனின் தாயின் கள்ளத் தொடர்பு காட்சிகள்.

நாவலின் மிகப் பெரிய ப்ளஸ், ஒவ்வொரு அத்தியாயமும் அட்டகாசமாக ஆரம்பித்து நன்றாக முடிகிறது. I like it.

ஆனால் மூன்றே மூன்று குறைகள்.
1. இரண்டு கதைகளும் இணையவில்லை.
2.சுந்தரின் வயது குழப்பமாக இருக்கிறது.
3. இரண்டாவது கதை சீர்திருத்த பள்ளியில் முடிவது ஏற்கனவே நிறைய தெரிந்த காட்சிகள்தான்.

ஆனால் இவை அனைத்தையும் மீறி நாவல் ஒரு க்ரைம் த்ரில்லரைப் போல பயனிக்கிறது. வறட்சியான தமிழ் இலக்கியத்தில் இந்த மாதிரியான நாவல்கள் தான் தேவை.   Mean Streets,  Gangs of Wassypur போன்ற தரமான திரைப்படமாக எடுக்க முடியும்.

Now it becomes one of my favourite novella.

மற்றபடி வன்முறை அழகியலோடு வந்திருக்கும் ஒரு சுவாரசியமான நாவல்
நீருக்கடியில் ‌சில குரல்கள்.

Note: சாரு நிவேதிதாவின் முன்னுரை class. மிக முக்கியமான ஒன்று.