90 வருடங்களுக்கு முன் அந்த சிறுவன் மூன்றாவதுப் படிப்பதற்காக திருவாரூரில் இருக்கும் அந்தப் பள்ளியில் நுழைகிறான். அனுமதி மறுக்கப்படுகிறது. காரணம் ஜாதி. 'எனக்கு உள்ளே நுழைய அனுமதி இல்லையென்றால் இந்த கமலாலய குளத்தில் விழுந்து இறந்துவிடுவேன்' என்று குளத்தை நோக்கி ஓடுகிறான். அங்கே இருந்த ஆசிரியர்கள் (?) அவனை சமாதானப்படுத்தி பள்ளியில் படிப்பதற்கு அனுமதி வழங்குகிறார்கள்.
பின்னர் படிப்பை உதறிவிட்டு அரசியலில் நுழைகிறான். ஆனால் பல தேர்தல்களில் இந்தியாவின் பிரதமர் யார் என்று முடிவு செய்யப்போவது தன்னுடைய கட்சிதான் என்று அப்போது அவனுக்கு தெரியாது. அந்த சிறுவனின் பெயர் கலைஞர் மு. கருணாநிதி.
எந்த தமிழகம் தன்னை படிக்க விடாமல் தடுத்ததோ அந்தத் தமிழர்களின் எதிர்காலத்துக்காக கருணாநிதி எழுப்பிய மாபெரும் கோட்டைதான் அண்ணா நூலகம்.
சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்திருக்கிறது அண்ணா நூலகம். தாராளமாக சொல்லலாம். இந்தியாவில் எந்த ஒரு அரசியல் கட்சியும் ஒரு சமுதாயத்திற்காக இப்படி ஒரு தொலைநோக்கு பார்வையுடன் எந்த ஒரு திட்டத்தையும் செயல் படுத்தியதில்லை.
சும்மா பார்த்துப் பார்த்துக் கட்டியிருக்கிறார்கள். மொத்தம் எட்டு தளங்கள். அமைதியான இடம். எந்நேரமும் குளிரூட்டப்பட்ட ராட்சச அறைகள். நினைத்த தளத்திற்கு செல்ல உங்களை தூக்கி செல்வதற்கு lifts.
முதல் தளத்தில் குழந்தைகள் மற்றும் செய்தித்தாள்கள் பிரிவு. இதில் Children
Section அற்புதம். தீம் பார்க் போல அட்டகாசமாக வடிவமைத்திருக்கிறார்கள். சிறுவர்களுக்கான உலக இலக்கியம், காமிக்ஸ், ஓவியம், புகைப்படம் என்று குட்டியை குட்டியாக லட்சக்கணக்கானப் புத்தகக்கங்களை அடுக்கி வைத்திருக்கிறார்கள். குழந்தைகளை மல்ட்டிப்ளெக்ஸுக்கு அழைத்து செல்லும் பெற்றோர்கள் ஒருமுறை இந்த நூலகத்துக்கு அழைத்து செல்லுங்கள்.
மற்ற தளங்களில் தமிழ் இலக்கியம், உலக இலக்கியம், Art and
Entertaiment, Law என்று விரிகிறது அண்ணா நூலகம்.
இந்தியாவின் சிறந்த பத்து நூலகங்களில் அண்ணா நூலகமும் ஒன்று. indiatoday.intoday.in/education/story/libraries-of-india/1/721376.html
இதில் ஒரு அரசியல் கட்சி கட்டியது அண்ணா நூலகம் மட்டுமே!
எதற்கெடுத்தாலும் கலைஞர் தமிழ் தமிழ் என்று பேசியே ஏமாற்றுகிறார் என்று சொல்பவர்கள் ஒருமுறை அண்ணா நூலகத்திற்கு சென்று வாருங்கள். அங்கு பேசாமலையே உங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள முடியும்.
கலைஞர் மு. கருணாநிதிக்கு 94வது பிறந்தநாள் வாழ்த்துகள்!




