பொதுவாக திரைப்படங்கள் பற்றிய புத்தகம் என்று வரும்போது பெரும்பாலும் திரைப்படங்கள் பற்றிய வரலாறு, உலக சினிமா இயக்குனர், விமர்சனம் என்றுதான் இருக்கும். இவை அனைத்தும் முக்கியமானதுதான் என்றாலும் சினிமாவை இன்னும் ஆழமாக அனுகுவதற்கும், தமிழ் சினிமா எப்படி இருக்கிறது, ஒரு விமர்சனம் எப்படி இருக்க வேண்டும், ஸ்டார்களின் நிலை என்ன, ஒரு நல்ல சினிமாவை எடுப்பது எவ்வளவு சுலபம், வியாபாரிகள் மற்றும் தியேட்டர்களிடம் சிக்காமல் ஒரு நல்ல படத்தை மக்களிடம் சென்று சேர்ப்பது எப்படி? போன்றவற்றுக்கெல்லாம் மிக அற்புதமாக விடையளிக்கிறது
செழியனின் பேசும் படம் - கடைசி இருக்கையிலிருந்து சில குறிப்புகள்.
முன்னுரை - பொதுவாக முன்னுரை என்று வரும்போது அந்த எழுத்தாளரின் வாழ்க்கை குறிப்புகள் அல்லது இலக்கியம் என்றால் என்ன அல்லது வேறு ஏதோ என்று அந்த புத்தகத்துக்கு சம்மந்தமே இல்லாமல் போய்க்கொண்டிருக்கும். சில சமயம் அதுவே 20, 30 பக்கங்களுக்கு ஒரு நாவலைப் போல் இருக்கும். ஆனால் பா.ராகவன், S.Ra, சாரு நிவேதிதா போன்றவர்கள் முன்னுரையிலேயே தங்கள் கதையை ஆரம்பித்துவிடுவார்கள். அதுவே சுவாரஸ்யமாக இருக்கும். அதுபோல இதன் முன்னுரையும் சில நல்ல தகவல்களுடன் அற்புதமாக ஆரம்பிக்கிறது.
முதல் கட்டுரை தமிழ் சினிமாவில் உள்ள அபத்த திரைக்கதைகளைப் பற்றி அலசுகிறது. தமிழில் எந்த மாதிரி திரைக்கதை உள்ளது, ஒவ்வொருவரும் அதை எப்படி அணுகியிருக்கிறார்கள் என்பதை தனக்கே உரிய எள்ளலுடன் விவரிக்கிறது. Action, flashbacks, songs, காதல், இரட்டையர்கள், என்று சகலமும் இதில் அடங்கும். இதில் கூர்ந்து கவனித்தால் அனைவரும் ஒரே மாதிரியான stereotype விஷயங்களை கையாண்டிருப்பது தெரிய வரும். மகேந்திரன், மணி ரத்னம், ஷங்கர், பாலா போன்ற எவரும் இதில் தப்பவில்லை. இந்த கட்டுரையில் உள்ள சுவாரஸ்யம்.என்னவென்றால் seriousசாக சொல்லும் அதே வேளையில் மறைமுகமாக பகடி செய்திருப்பதுதான்.
அடுத்து மிக முக்கியமானது. தரமற்ற ஊடக நிகழ்ச்சிகள் குழந்தைகள் மீது என்ன மாதிரியான வன்முறையை பாய்ச்சுகிறது, அவர்கள் என்ன மாதிரியான பாதிப்புகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை விவரிக்கிறது. மேலும் நாம் என்ன மாதிரியான படங்களை தருகிறோம், பள்ளிகளில் என்ன மாதிரியான பாடல்களுக்கு இடுப்பை ஆட்டுகிறார்கள் என்பதை மிக வன்மையாகவே கண்டிக்கிறார். நிறைய கோபமான வார்த்தைகள். Hats off.
அடுத்து கன்னத்தில் முத்தமிட்டால் படத்தின் விமர்சனம். இதுதான் இந்த புத்தகத்தின் highlight. இது வரை வந்த உலக மற்றும் உள்ளூர் சினிமா விமர்சனங்களில் இதை மிக சிறந்தாக நாம் கருதலாம். காரணம் இருக்கிறது. பொதுவாக ஒரு திரைப்படத்தில் உள்ள லாஜிக் ஓட்டைகள், வரலாற்று பிழைகள், திருட்டு போன்றவற்றை விமரசிப்பது சுலபம் (அனால் அதற்கும் நிறைய அனுபவமும், கூர்மையான பார்வையும் வேண்டும்). ஆனால் இன்னொன்று இருக்கிறது. அது
நல்ல- படம் ஓடாத- படம்.
இதை விமர்சிப்பதுதான் மிக மிக கஷ்டம். ஏனென்றால் வெளியில் இருந்து பார்க்கும் போது அற்புதமான படமாக இருக்கும். உள்ளே சென்று பார்த்தால்தான் அதில் இருக்கும் நிறைய தவறுகள் தெரியும். இப்படி நல்ல-படம்-ஓடாத-படம் listல் பல படங்கள் இருந்தாலும் அதில் மிக முக்கியமான படம் கன்னத்தில் முத்தமிட்டால். காரணம், A Mani Ratnam film.
இந்த படத்தைதான் scene by sceneனாக விமர்சித்திருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு பார்வையாளனின் பார்வையிலேயே சென்று அனுகியிருக்கிறார். இப்படி அனுகும் போதுதான் அந்த படம் ஏன் ஓடவில்லை என்று தெரிய வரும். படத்தின் டைட்டிலில் ஆரம்பித்து climax வரை முக்கியமான காட்சிகளை எங்கெங்கெல்லாம் படம் சொதப்பியிருக்கிறது மற்றும் எந்தந்த காட்சிகள் அற்புதமாக இருக்கிறது என்று அலசியிருக்கிறார். படத்தின் முழு கதையை சொன்னாலும் பெரிய படங்களுக்கு இது மிகவும் அவசியமாகிறது. நமக்கும் ஒரு நல்ல பார்வை கிடைக்கிறது. இதை Deep Analysis என்று சொல்லலாம். இந்த முறையை வைத்து பல நல்ல படம் ஓடாத படங்களையும் விமர்சித்து பார்த்தால் அந்த படங்கள் ஏன் ஓடவில்லை என்று நன்றாகவே தெரியும். நானும் இந்த படம் நல்ல படம்தானே ஏன் ஓடவில்லை என்று பல நாட்கள் நினைத்துக்கொண்டிருந்தேன். இந்த விமர்சனத்தை படித்த பிறகுதான் எல்லாமே தெரிந்தது.
மேலும் பிதாமகன், காதல், Children of Heaven போன்ற படங்களுக்கும் அற்புதமான விமர்சனங்கள்.
அடுத்து இளையராஜாவைப் பற்றிய கட்டுரை. ஒரு இசையமைப்பாளர் எப்படி இசையின் அடி ஆழத்திற்கு சென்று அந்த இசையை ஒரு சினிமாவில் தரமுடியும் என்பதை பல தகவல்களுடன் சொல்கிறது. முக்கியமாக Inspired மற்றும் Copy-Paste இசையமைப்பாளர்கள் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை இது.
ஆனால் இவ்வளவு சாதனைகள் செய்திருந்தாலும் வெறும் வணிக சினிமாவில் சிக்கிக்கொண்டதால்தான் அவரைபற்றி இவ்வளவு சொல்ல வேண்டியிருக்கிறது என்பதையும் சொல்கிறது. 100% true. A.R.Rehman ்போல் சர்வதேச அங்கீகாரம் கிடைக்காமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம். ஏனென்றால் அவருடைய அற்புதமான இசை அனைத்தும் வணிக மற்றும் தமிழ் தரத்தில் உள்ள திரைப்படங்களில் அமுங்கி விட்டது. ஏனென்றால் எந்த இசையாக இருந்தாலும் அது நல்ல படத்தில் இருந்தால்தான் அது தமிழகத்தைத் தாண்டி வெளியில் தெரியும். மேலும் Satyajit Ray, Katak, Mira Nair போன்ற film makers கிடைக்காமல் போனது இன்னொரு கொடுமை. படித்து பாருங்கள். இளையராஜா எவ்வளவு பெரிய ஆளுமை என்பது தெரிய வரும். இளையராஜாவின் வெறித்தனமான ரசிகர்கள் கூட இந்த அளவுக்கு அனுகியிருப்பார்களா என்பது சந்தேகமே. அவ்வளவு details.
மீண்டும் Mani Ratnam. இம்முறை அலைபாயுதே. ஆனால் விமர்சனம் அல்ல. "நேற்று முன் இரவில்" என்ற பாடல் படமாக்கப்பட்டதை சொல்லும் ஒரு அற்புதமான கட்டுரை. செழியன் உதவி ஒளிப்பதிவாளராக P.C.ஸ்ரீராமிடம் இருந்த பொழுது எழுதப்பட்டது. இந்திய சினிமா பாடல்களை gymnastics என்று அயல் நாட்டினர் கிண்டல் அடித்துக்கொண்டிருக்கும் பொது ஒரு பாடல் படமாக்கப்பட்டதை சொல்வதற்கு உண்மையிலேயே ஒருவருக்கு அசாத்திய துணிச்சல் வேண்டும். ஆனால் செழியன் சொன்ன விதம் வேறு.
சென்னை to மகாராஷ்டிரா பயணம், பாடல் படமாக்கப்பட்ட விதம், Mani-Sriram விவாதங்கள், locations, மற்றும் நினைவுகளுடன் திரும்பி சென்னைக்கு வருவது என்று பல விஷயங்களை கடந்து செல்கிறது. ஒரு உதவி ஒளிப்பதிவாளராக, மாணவனாக, ரசிகனாக இவர் சொல்லியிருப்பது ஒரு adventure கதையைப்போல் இருக்கிறது.
அடுத்து stars. அதாவது நல்ல படங்களின் வருகையால் ஸ்டார்களின் புகழ் மங்கிப் போய்க்கொண்டிருக்கும் நிலையையும் அவர்களது இறுதி காலங்களை பற்றியும் அலசுகிறது. இந்த புத்தகம் வெளிவந்த வருடம் 2007. ஆனால் இன்றைக்கு ஸ்டார்களின் நிலைமை இன்னும் மோசம். கதை இல்லை என்றால் கடவுளே ஆனாலும் படம் காலி என்று வியாபாரிகளே சொல்லிவிட்டார்கள். இதற்கு ஒரு நல்ல உதாரணமாக, ஒரு நடிகரின் 7 மணி நேர உண்ணாவிரத நிகழ்ச்சியைப் பொறுமையாக பார்க்கும் ஒரு ரசிகனால் ஏன் 2 மணி நேர படத்தைப் பொறுமையாக பார்க்கமுடியவில்லை என்ற கேள்வி இடம்பெறுகிறது. 100% true.
மேலும் ஒரு படம் வெற்றியடையும் போது ஒரு நடிகன் அது தன்னால்தான் என்று முழு லாபத்தை அடைந்துகொள்வது அதே சமயத்தில் ஒரு படம் தோல்வியடையும்போது கதை சரியில்லை,அது இது என்று ஒளிந்துகொள்வது என்று நடிகர்களின் சுயநலத்தை அற்புதமாக விவரிக்கிறது. மேலும் M.G.R, ரஜினி, கமல் போன்றவர்கள் தங்கள் இருப்பை தக்க வைத்துக்கொள்ள ரீமேக், உலக சினிமா காப்பி என்று தமிழ் சினிமாவை முன்னேற விடாமல் வியாபார மண்டியாகவே வைத்துள்ளார்கள் என்று ஆணி அடித்தார் போல் சொல்கிறது.
அதுபோல் ஒரு நல்ல படத்தை எடுக்க பணம், தயாரிப்பாளர்கள், விநியோஸ்தகர்கள் போன்ற எந்த வஸ்துகளும் தேவையில்லை என்றும், நாலு பேர் சேர்ந்தால் ஒரு நல்ல படத்தை எடுக்க முடியும் என்றும் பல நல்ல உதாரணங்களுடன் மற்ற கட்டுரைகள் அலசுகிறது. இதற்கு உதாரணமாக பதேர் பாஞ்சாலி வருவதற்குமுன் இந்திய சினிமா எப்படி வியாபார சந்தையாக இருந்தது என்றும், அந்த படம் வந்த பிறகு என்ன மாதிரியான மாற்றங்களை நிகழ்த்தியது என்றும் ஒரு விமர்சனமாக இடம்பெறுகிறது.
இறுதியாக இந்த புத்தகத்தை படித்து முடித்த பின் ஒரு நல்ல சினிமாவை எடுப்பது எவ்வளவு சுலபம் என்பது தெரிய வரும்.
மொத்தத்தில் செழியனின் பேசும் படம் a classic.